உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கிள் காலம் வடமாநில தம்பதி தற்கொலை

சிங்கிள் காலம் வடமாநில தம்பதி தற்கொலை

சென்னை,மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரித்திக் காயல், 23. இவரது மனைவி தஸ்மிரா காதுன், 23. இருவரும், பெரியமேடு, கோவளம் முத்து கிராமணி தெருவில் உள்ள தங்கும் விடுதியில் அறை எண்: 302ல் தங்கி இருந்தனர்.நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து பார்த்தனர்.அப்போது, ரித்திக் காயல் துாக்கிட்டு தற்கொலை செய்ததும், தஸ்மிரா காதுன் விஷம் குடித்து தற்கொலை செய்தும் தெரிய வந்தது. உடல்களை மீட்ட போலீசார், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், ரித்திக் காயல் திருவான்மியூரில் உள்ள ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். தஸ்மிரா ராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.வாரத்திற்கு ஒருமுறை, பெரியமேடு விடுதியில் தங்கி வந்தது தெரியவந்தது. குழந்தை இல்லாததால், தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை