உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.60,000 பறிமுதல்

சார் - பதிவாளர் ஆபீசில் ரூ.60,000 பறிமுதல்

சென்னை, வில்லிவாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், 60,000 ரூபாயை கைப்பற்றினர்.சென்னை வில்லிவாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும், பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த அலுவலகத்தை ரகசியமாக கண்காணித்த, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கணக்கில் வராத, 60,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சிவசங்கரி என்ற அதிகாரியிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை