உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சகோதரிகளுக்கு காதல் வலை ஏற்காததால் வீடு புகுந்து ரகளை

சகோதரிகளுக்கு காதல் வலை ஏற்காததால் வீடு புகுந்து ரகளை

ஐ.சி.எப்., வில்லிவாக்கம் பகுதியில், கணவரை இழந்த 40 வயது பெண், ஐ.சி.எப்., காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:வில்லிவாக்கத்தில், இரண்டு மகள்களுடன் வசிக்கிறேன். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார், 22, என்பவர், என் மூத்த மகளை காதலிப்பதாக, இரு ஆண்டுகளுக்கு முன் தொந்தரவு செய்தார். அவரது பெற்றோரிடம் கூறி கண்டித்த பின், என் மகளிடம் பேசாமல் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த கோகுல்குமார், என் இரண்டாவது மகளை காதலிப்பதாக கூறி ரகளை செய்தார். வீட்டில் தனியாக இருந்த என் மகளை தாக்கி, பொருட்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.அதன் அடிப்படையில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த ஐ.சி.எப்., போலீசார், கோகுல்குமாரை கைது செய்து, நேற்று சிறையில் அடைததனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை