உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்மஞ்சேரி வாலிபருக்கு வெட்டு 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

செம்மஞ்சேரி வாலிபருக்கு வெட்டு 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

செம்மஞ்சேரி,வாலிபரை வெட்டிய, 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர். செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 20. இரு தினங்களுக்கு முன், வீட்டின் அருகே நின்ற போது, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆறு பேர், செம்மஞ்சேரி பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தனர். இது குறித்து, சக்திவேல் அவர்களிடம் விசாரித்துள்ளார். இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விலக்கி விட்டதும், அங்கிருந்து ஆறு பேரும் சென்றனர். மறுநாள், சக்திவேலை தேடி வந்த அவர்கள், கத்தியால் முதுகு, தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த சூர்யா, 24, மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று, ஆறு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சூர்யாவை புழல் சிறையில் அடைத்தனர். ஐந்து சிறுவர்களையும், அரசு கூர்நோக்கு பள்ளியில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை