உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி

சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி

சென்னை, தமிழக வேளாண் பல்கலை பயிற்சி மையத்தில் சிறுதானிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை, சிப்பெட் காலேஜ் எதிரில் உள்ள வேளாண் பல்கலை பயிற்சி மையத்தில், வரும் 15ம் தேதி சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், தினை அரிசி பாயசம், தினை மாவு உருண்டை, ராகி ரொட்டி, கம்பு கஞ்சி, குதிரைவாலி உப்மா, ராகி இட்லி, கோதுமை ரவா புட்டு, சிறுதானிய அடை, சிறுதானிய கொழுக்கட்டை, ராகி முறுக்கு உள்ளிட்ட உணவு வகைகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது மறுநாளான 16ம் தேதி, காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்த தகவல்களை அறிய, 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை