உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிறவி இதய கோளாறுக்கு தீர்வாகும் சிறுதுளை சிகிச்சை

பிறவி இதய கோளாறுக்கு தீர்வாகும் சிறுதுளை சிகிச்சை

சென்னை, ''பிறவி இதய பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, திறந்தநிலை அறுவை சிகிச்சையை விட, சிறுதுளை சிகிச்சை நிரந்த தீர்வாக இருக்கிறது,'' என, அப்பல்லோ மருத்துவமனை இதய மற்றும் பிறவி இதய கோளாறு சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.எஸ்.முத்துக்குமரன் கூறினார்.இது குறித்து டாக்டர்.முத்துகுமரன் கூறியதாவது:நாட்டில் பிறக்கும் எட்டில் ஒரு குழந்தை பிறவி இதய பிரச்னையால் பிறக்கிறது. இதய பிரச்னைகளுக்கு, 'ரத்த நாளவழி' சிகிச்சைகள் தீர்வாக இருந்தாலும், 'டெட்ராலஜி ஆப் பாலோட்' போன்ற சிக்கலான இதய நோய்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றன.ஆரம்பத்தில் பழுது நீக்கும் அறுவை சிகிச்சைக்கு பின், இந்த குழந்தைகளுக்கு பழுதடைந்த நுரையீரல் வால்வை மாற்றுவதற்கு, மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.எனவே, திறந்தநிலை அறுவை சிகிச்சை இல்லாமல், தொடையில் சிறுதுளையிட்டு, ரத்த நாளங்கள் வாயிலாக, வால்வு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வால்வு, பசு மற்றும் பன்றியின் இயற்கையான திசுக்களில் இருந்து உருவாக்கப்படுகிறது. எனவே, வால்வு மாற்று சிகிச்சை நிரந்த தீர்வாகவும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி