உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2.06 கோடியில் புகை பரப்பும் இயந்திரங்கள்

ரூ.2.06 கோடியில் புகை பரப்பும் இயந்திரங்கள்

சென்னை, சென்னையில் 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான புகைப்பரப்பும் இயந்திரங்களை மேயர் பிரியா பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி பகுதிகளில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், 1.26 கோடி ரூபாய் மதிப்பில் வாகனங்கள் வாயிலாக புகைப்பரப்பும் 30 இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதேபோல், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நீர்வழிப்பாதையில் மருந்து தெளிக்க, 15 வாகனங்களுடன் கூடிய கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் என, 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களின் செயல்பாட்டை மேயர் பிரியா, ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்வில் நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன், துணை கமிஷனர்கள் ஜெயசந்திர பானு ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை