ஸ்னுாக்கர், பில்லியர்ட்ஸ் போட்டி 12 கிளப் அணிகள் பலப்பரீட்சை
சென்னை, அண்ணா நகர் டவர் கிளப் சார்பில், கிளப் அணிகளுக்கு இடையிலான, ஸ்னுாக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகள், அண்ணா நகரில் நேற்று காலை துவங்கின. டவர் கிளப், பிரசிடென்சி, எம்.சி.சி., உட்பட மொத்தம் 12 கிளப் பங்கேற்றுள்ளன.இதில், 6, 10, 15 ரெட் ஸ்னுாக்கர்ஸ் மற்றும் 45 நிமிடம் விளையாடும் பில்லியர்ஸ் உட்பட, ஐந்து விதமான போட்டிகள் நடக்கின்றன.பில்லியர்ட் மற்றும் ஸ்னுாக்கர் ஆகிய இரு போட்டிகள், புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.போட்டியில் பங்கேற்றுள்ள கிளப் அணிகள், தலா மூன்று என, நான்கு குழுவாக பிரித்து, லீக் முறையில் மோதி வருகின்றன. இதில் தேர்வாகும் தலா இரண்டு அணிகள், 'நாக் அவுட்' முறையில் மோத உள்ளன.முதல் நாள் போட்டியை, டவர் கிளப் தலைவர், வடசென்னை தி.மு.க., - எம்.பி.,யுமான கலாநிதி துவங்கி வைத்தார். போட்டிகள் தொடர்ந்து, 13ம் தேதி வரை நடக்கின்றன.