திடக்கழிவு மேலாண்மை சவால் நிறைந்தது
சென்னையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதில், திடக்கழிவு மேலாண்மை சவால் நிறைந்ததாகவே உள்ளது. குறிப்பாக, சென்னையிலேயே வசிப்பவர்கள், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றுவோர், தினமும் வந்து செல்வோர் என, மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, குப்பை கையாளும் பணி சவால் நிறைந்ததாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் குப்பை கையாளும் இடங்களில், அப்பணி சிறப்பாகவே நடந்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து பெரிதாக எவ்வித புகாரும் வருவதில்லை. -- பிரியா, சென்னை மாநகராட்சி மேயர்