சில வரி செய்திகள்
வெல்டரை தாக்கியவர் கைது தி ருவொற்றியூர், ஏகவல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன், 32; வெல்டர். கடந்த 7ம் தேதி இரவு, ஈசாணி மூர்த்தி கோவில் தெருவில் சண்டையிட்ட ஒரு கும்பலுக்கு இடையே பார்த்திபன் சிக்கியுள்ளார். அவர்கள் சரமாரியாக தாக்கிஉள்ளனர். இது தொடர்பாக, திருவொற்றியூரைச் சேர்ந்த விஜேந்திரன், 32, என்பவரை, போலீசார், நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். வழிப்பறி செய்தசிறுவர்கள் கைது க ர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஜித் நாராயண் நாயக், 20. இவர், அடையாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 7ம் தேதி பூக்கடை, ஈவ்னிங் பஜார் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல், சுஜித் நாராயண் நாயக்கை வழிமறித்து, 1,500 ரூபாய் பறித்து தப்பியது. இது குறித்து விசாரித்த பூக்கடை போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவர்கள் இருவரை நேற்று கைது செய்தனர்.