உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சில வரி செய்திகள்/

சில வரி செய்திகள்/

கஞ்சா சாக்லெட் விற்ற 4 பேர் கைது திருவல்லிக்கேணி: எல்லீஸ் சாலை சுரங்கப்பாதை அருகே, கஞ்சா சாக்லெட் விற்ற, எழும்பூரைச் சேர்ந்த விகாஷ்குமார் டான்டி, 34, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன், 22, கமலேஷ், 20, கீர்த்திவாசன், 20 ஆகிய நான்கு பேரை, திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 36 கஞ்சா சாக்லெட்டுகள், 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில், கொக்கைன் போதைப் பொருள் விற்ற பிராட்வேயை சேர்ந்த அமிருதீன், 36, மண்ணடியை சேர்ந்த அஸ்லாம், 66 என, இருவர் ஏற்கனவே கைதாகினர். இவ்வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூரை சேர்ந்த தாஜுதீன், 41, கீழ்கட்டளையைச் சேர்ந்த கோவிந்த், 41 ஆகிய இருவரை நேற்று, அமைந்தக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. ஏமாற்றிய காதலன் காதலி புகார் ஓட்டேரி: சென்னை, ஓட்டேரியை சேர்ந்த 19 வயது பெண், கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டருகே வசிக்கும் விஷ்வா என்கிற கலைச்செல்வன், 25 உடன் மூன்று ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். இருவரும் விடுதி ஒன்றில் அறை எடுத்து, ஒன்றாக இருந்துள்ளனர். இந்நிலையில், கலைச்செல்வனுக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன், வரும் 28 ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை அறிந்த கல்லுாரி மாணவி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர். கத்தியுடன் திரிந்த சிறுவர்கள் கைது வியாசர்பாடி: சென்னை, வியாசர்பாடி, தேபர் நகர் பகுதியில், கத்தியுடன் சுற்றி திரிந்த, அதே பகுதியை சேர்ந்த 17 வயது நான்கு சிறுவர்கள் பேர் மற்றும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த சின்னசாமி, 24, வியாசர்பாடியை சேர்ந்த சச்சின், 20 ஆகிய ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், வியாசர்பாடி , நேரு நகர், கூட்ஸ்செட் ரோடு அருகே நேற்று போலீசார் மேற்கொண்ட ஆய்வின் போது, கத்தியுடன் சுற்றி திரிந்த 17 வயது சிறுவன் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த சக்திகுமார், 21 ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைக்கடிகாரத்தை திருடியவர் கைது சென்னை: அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 53. அவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் சர்வீசில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரையில், சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் உள்ள மணற்பரப்பில் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை மர்மநபர் ஒருவர் அவரது கை கடிகாரத்தை திருடியபோது கண் விழித்தவர், திருடனை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் தப்பிவிட்டார். புகாரின் படி வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார், திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்த ஆர்யா, 36 திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். நேற்று அவரை கைது செய்து, கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற ஒடிசா பெண் கைது அடையாறு: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த மம்தா பிரதான், 48, என்ற பெண்ணை அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வது தெரிந்தது. அவரிடம் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ