சில வரி செய்திகள்
சிறுமியை சீண்டிய மேலும் ஒருவர் கைது கோயம்பேடு:கோயம்பேடில் ஒரு தனியார் விடுதியில், 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மாள், 45, துணை நடிகர் ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி, 60, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ், 40, உட்பட எட்டு பேரை, கோயம்பேடு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரன், 53, என்பவரை நேற்று கைது செய்தனர்.போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது ஜெ.ஜெ நகர்:ஜெ.ஜெ நகர், 'வெல்கம் இன்' ஹோட்டல் வாகன நிறுத்தம் அருகே மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வின், 30, என்ற வாலிபரை, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கடந்த 9ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், ஆவடி, மேற்கு காந்தி நகரைச் சேர்ந்த வினோத் குமார், 31, என்ற வாலிபரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.மெரினா கடற்கரையில் பம்பை வாத்தியம் மெரினா:மெரினா கடற்கரை, நீச்சல் குளம் அருகில் உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக மாற்றப்பட்டது. தமிழக பாரம்பரிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாநகராட்சி சார்பில், நேற்று மாலை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதில், சிலம்பாட்டம், தப்பாட்டம், பம்பை வாத்தியம், தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலைகளை, 55 கலைஞர்கள் அரங்கேற்றினர். இதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மாணவியை சீண்டிய காவலாளி கைது எம்.ஜி.ஆர்., நகர்:எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த 19 வயது மாணவி , பாட்டி வீட்டில் தங்கி, கல்லுாரியில் இரண்டாம் ஆண் டு படித்து வருகிறார். 'கேபிள் டிவி' இணைப்பு கொடுப்பதாக கூறி, வீட்டிற்கு வந்த கணேஷ், 44, என்பவர், வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்து, அவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் கணேஷ் மீது, வடபழனி மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கு உள்ளது.