மதுபோதையில் தாயை வெட்டிய மகன் கைது
வியாசார்பாடி,வியாசர்பாடி, வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 40. இவரது மூத்த மகன் மிதுன், 21. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்து, தாய் ராஜேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த மிதுன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, ராஜேஸ்வரியின் தலையில் வெட்டியுள்ளார். ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு, ராஜேஸ்வரியின் முன்பக்க தலையில், நான்கு தையல்கள் போடப்பட்டன. மருத்துவமனை அளித்த தகவலின்படி, செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, மிதுனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.