உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தந்தை இறப்புக்கு காரணமான மகன் துாக்கிட்டு தற்கொலை

தந்தை இறப்புக்கு காரணமான மகன் துாக்கிட்டு தற்கொலை

திரு.வி.க.நகர்: கீழே தள்ளியதில் தந்தையின் இறப்புக்கு காரணமான மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பூர், பாலமுருகன் தெருவை சேர்ந்தவர் தினகரன், 24. இவரது தந்தை சேகரன், ஓய்வு பெற்ற தலைமை காவலர். கடந்த மார்ச் மாதம் மது போதையில் இருந்த தினகரன், தந்தை சேகரனை கீழே தள்ளி விட்டார். இதில் காயமடைந்த சேகரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிந்து, தினகரனை கைது செய்தனர். கடந்த ஜூலை மாதம் ஜாமினில் வெளியே வந்த தினகரன், வேலைக்கு செல்லாமல், மது போதையிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதீத மது போதையில் வீட்டுக்கு சென்ற தினகரன், தாய் ராஜேஸ்வரியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜன்னல் வழியே பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை