உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாயின் தாலி செயினை அறுத்த மகனுக்கு வலை

தாயின் தாலி செயினை அறுத்த மகனுக்கு வலை

திரு.வி.க., நகர், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 42. இவர், பட்டாளம் பகுதி மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம், மீன் விற்ற பாக்கி பணத்தை வசூல் செய்ய, திரு.வி.க., நகர் மீன் மார்க்கெட்டில் இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த வரலட்சுமியின் மகன் அவினாஷ், 27, வரலட்சுமியிடம் பணம் கேட்டு பிடிவாதம் செய்துள்ளார்.வரலட்சுமி பணம் தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த அவினாஷ், வரலட்சுமி அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு மாயமானார்.இதுகுறித்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு, வரலட்சுமி தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த திரு.வி.க., நகர் போலீசார், வரலட்சுமியிடம் விசாரித்து, அவரது மகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை