மேலும் செய்திகள்
குடிபோதை தகராறு கும்பல் கைது
16-Apr-2025
சென்னை, வடபழநி, திருநகரைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 33. இவரது மனைவி நசிரா பேகம். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள தாய் வீட்டிற்கு, நசிரா பேகம் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.பிப்., 27ம் தேதி மாமியார் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற ரகுமான், தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரை அடுத்து, மதுரவாயல் போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்த அப்துல் ரகுமான், நேற்று அதிகாலை மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ரிஹானா பேகம், 55, நெஞ்சில் குத்தினார். தடுக்க வந்த மைத்துனர் சர்தார், 28, என்பவரையும் சரமாரியாக குத்தினார்.தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்துல் ரஹ்மானை கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
16-Apr-2025