தென் மண்டல துப்பாக்கி சுடுதல் எஸ்.ஆர்.எம்., வீராங்கனை வெள்ளி
சென்னை, : கேரளாவில் நடந்த தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் லத்திகா, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கேரள மாநில துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில், 16வது தென் மண்டல துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில், பெண்களுக்கான 25 மீட்டர் 'ஸ்டாண்டர்ட் பிஸ்டல்' பிரிவு போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை மாணவி லத்திகா, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். மேலும், இவர் 25 மீட்டர் 'ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்' மற்றும் 25 மீட்டர் 'ஸ்டாண்டர்ட் பிஸ்டல்' ஆகிய பிரிவுகளில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.