உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென்மண்டல கபடி போட்டி நான்கு தமிழக பல்கலை தகுதி

தென்மண்டல கபடி போட்டி நான்கு தமிழக பல்கலை தகுதி

சென்னை: இந்திய பல்கலை சங்கங்களின் ஆதரவில், சென்னை விநாயகா மிஷன் பல்கலை சார்பில், தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி, பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது. இப்போட்டியில், தென்மாநில அளவிலான, 70 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று காலை நடந்த காலிறுதி ஆட்டத்தில், பெரியார் பல்கலை, 46 - 33 என்ற புள்ளிக்கணக்கில் அண்ணா பல்கலையையும், விநாயகா மிஷன் பல்கலை, 32 - 30 என்ற புள்ளிக்கணக்கில் அழகப்பா பல்கலையையும் வீழ்த்தின. மற்றொரு போட்டிகளில், பாரதியார் பல்கலை, 52 - 30 என்ற புள்ளிக்கணக்கில் ஆந்திராவின் கிருஷ்ணா பல் கலையையும், அன்னை தெரசா பல்கலை அணி, 42 - 37 புள்ளிக்கணக்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையையும் வென்றன. வெற்றி பெற்ற நான்கு தமிழக பல்கலை அணிகளும், 'லீக்' முறையில் மோதி, புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பெறும் அணி தேர்வு செய்யப்படும். தேர்வான நான்கு அணிகளும், லடாக்கில் உள்ள கார்கில் நகரில் நடக்கும் அகில இந்திய அளவிலான பல்கலை கபடி போட்டிக்கு நேரடியாக தேர்வாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !