உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென்மண்டல டேபிள் டென்னிஸ் 80 பல்கலைகள் பலப்பரீட்சை

தென்மண்டல டேபிள் டென்னிஸ் 80 பல்கலைகள் பலப்பரீட்சை

சென்னை, கானத்துாரில் நேற்று துவங்கிய, தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில், 80 பல்கலை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.இந்திய பல்கலைகளில் கூட்டமைப்பின் ஆதரவில், அமெட் பல்கலை சார்பில், தென் மண்டல அளவிலான மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டி, கானத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில், நேற்று காலை துவங்கியது. போட்டியில், தென் மண்டல அளவில், 80 பல்கலை அணிகள் பங்கேற்கின்றன. காலை, 8:00 மணிக்கு துவங்கிய போட்டியை, தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், அமெட் பல்கலை தலைவர் ராஜேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகள், 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடக்கிறது. காலை நடந்த முதல் போட்டியில், கேரளா பல்கலை 3 - 0 என்ற கணக்கில், மைசூர் பல்கலையையும், கர்நாடகாவின் அக்கமஹாதேவி பல்கலை, 3 - 0 என்ற கணக்கில் ரைச்சூர் பல்கலையையும் வீழ்த்தின. பெங்களூரு விஸ்வேஸ்வரா பல்கலை, 3 - 1 என்ற கணக்கில், ராணி சின்னம்மா பல்கலையை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து, 5ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ