உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தென்மண்டல டேபிள் டென்னிஸ் இன்று துவக்கம்

தென்மண்டல டேபிள் டென்னிஸ் இன்று துவக்கம்

சென்னை, இந்திய பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பு ஆதரவில், அமெட் பல்கலை சார்பில், தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, கானத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில், இன்று துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது.போட்டியில், தென் மண்டல அளவில் 104 பல்கலை அணிகள் பங்கேற்கின்றன. காலை, 8:00 மணிக்கு துவங்கும் இப்போட்டியை, தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி துவங்கி வைக்க உள்ளார்.அதேபோல், அமெட் பல்கலை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, அகில இந்திய அளவிலான பீச் வாலிபால் மற்றும் பீச் 'ரெஸ்லிங்' போட்டிகளை, இம்மாதம் 17 - 19ம் தேதிகள் வரை நடத்துகின்றன. இப்போட்டிகளில், 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.இந்த மாபெரும் விளையாட்டு போட்டிகளில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !