மேலும் செய்திகள்
தங்கமயில் நிறுவனத்தில் இன்று சிறப்பு தள்ளுபடி
30-Oct-2025
சென்னை: 'தங்கமயில்' ஜுவல்லரியில், சேதாரத்தில் இரண்டு நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று நிறைவடைகிறது. தங்க மயில் ஜுவல்லரியில், உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு, சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி தரும் திட்டம் நேற்று துவங்கியது. வாடிக்கையாளர்கள் வாங்கும் 20 சதவீதம் வரை சேதாரம் உள்ள நகைகளுக்கு சேதாரம், 9.99 சதவீதம்; 20 சதவீதத்திற்கு மேல் உள்ள நகைகளுக்கு, 13.99 சதவீதம் சேதாரம் மட்டுமே கணக்கிடப்படுகிறது. இச்சலுகை 40 கிராமிற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த இரண்டு நாள் சிறப்பு தள்ளுபடி சலுகை, இன்றுடன் நிறைவடைகிறது. மேலும் சிறப்பு சலுகையாக, வைர நகைகள் காரட்டிற்கு, 5,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு. இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் அறிவித்துள்ளது.
30-Oct-2025