உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போத்தனுாருக்கு சிறப்பு ரயில்

 போத்தனுாருக்கு சிறப்பு ரயில்

சென்னை: பயணியர் நெரிசலை கருத்தில் வைத்து, போத்தனுாரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை மாவட்டம், போத்தனுாரில் இருந்து, வரும் 18ம் தேதி காலை 7:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 4:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ