புறநகரில் சூடுபிடித்த கீரை விளைச்சல்
சென்னை செங்குன்றத்தில் இருந்து 9 கி.மீ., துாரத்தில் உள்ள பழைய பம்மதுகுளம், கோணிமேடு சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் கீரை வகைகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இங்குள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இரண்டு தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.இங்கு 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கை, தண்டுகீரை, பொன்னாங்கண்ணி, என பல வகை கீரைகள் பயிரிடப்படுகின்றன.கோடை துவங்கியதை அடுத்து, கடந்த மாதம் முதல் கீரை விவசாயம் சூடுபிடித்துள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு பின், கீரை வகைளை விரும்பி உண்ணத் துவங்கியுள்ள மக்களுக்கு, சென்னைக்கு அருகே ரசாயன கலப்பில்லாத கீரை வகைகள் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.- நமது நிருபர் -