மேலும் செய்திகள்
தமிழ் வார விழா வென்றோருக்கு சான்று
14-Jun-2025
சென்னை,சென்னை மாவட்ட கேரம் சங்கம் சார்பில், ஓபன் கேரம் போட்டி, மெட்ராஸ் ஆர்யன் கிளப்பில் நடந்தது. போட்டியில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு கிளப் மற்றும் அகாடமிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.ஆண்கள், பெண்கள் மற்றும் பதக்கம் அல்லாத என, மூன்று பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆண்களுக்கான பிரிவில், வி.எம்.சி., கிளப் வீரர் அருண்கார்த்திக் முதலிடத்தையும், ஐ.ஓ.சி., வீரர் ரமேஷ்பாபு இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.பெண்களுக்கான போட்டியில், சென்னையை சேர்ந்த கீர்த்தனா முதலிடத்தையும், ஐ.டி.ஆர்.சி., வீராங்கனை நாகஜோதி இரண்டாமிடத்தையும் கைப்பற்றினர்.அதேபோல், பதக்கம் அல்லாத பிரிவில், யு.சி.ஏ., கிளப் ஜோஷ்வா முதலிடத்தையும், சி.சி.சி., கிளப் வீரர் ராஜு இரண்டாமிடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு, பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
14-Jun-2025