உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யு - 16 கிரிக்கெட் போட்டிகள்

யு - 16 கிரிக்கெட் போட்டிகள்

சென்னை,:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சிட்டி பள்ளி யு - 16 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.நேற்று முன்தினம், செம்மஞ்சேரி ஜேப்பியார் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில், மேற்கு மாம்பலம் அரசு பள்ளி, 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு, 197 ரன்களை அடித்தது.அடுத்து விளையாடிய, கோபாலபுரம் நேஷனல் பப்ளிக் பள்ளி, 26.3 ஓவர்களில், 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 82 ரன்கள் வித்தியாசத்தில், அரசு பள்ளி வெற்றி பெற்றது.மணிமங்கலம், தனலட்சுமி கல்லுாரியில் நடந்த போட்டியில், ஜோலார்பேட்டை செயின்ட் ஜான்ஸ் பள்ளி, 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து, 302 ரன்கள் அடித்தது. அணியின் வீரர் சர்வேஷ், 80 பந்துகளில், 4 சிக்சர், 17 பவுண்டரியுடன், 155 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் அக் ஷய் பாரத், 78 பந்துகளில், இரண்டு சிக்சர், 12 பவுண்டரியுடன், 104 ரன்கள் அடித்தார். அடுத்து பேட்டிங் செய்த, லா சாட்லைன் ஜூனியர் அணி, 25 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து, 68 ரன்களை அடித்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை