நகருக்கு எஸ்.பி.பி., பெயர் சூட்ட மகன் கோரிக்கை
சென்னை, றைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வசித்த நகர் அல்லது வீதிக்கு, அவரது பெயர் சூட்ட வேண்டும் என, அவரது மகன் சரண், முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.மனுவில் சரண் கூறியிருப்பதாவது:சினிமா துறையில், தன் இசையின் வழியே தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரது நினைவை போற்றும் வகையில், அவர் வாழ்ந்த சென்னை காம்தார் நகர் அல்லது அவர் வசித்த வீதிக்கு, அவரது பெயரை சூட்ட ஆவன செய்ய வேண்டும்.அவரது ரசிகன், மகன் என்ற முறையிலும், என் குடும்பத்தினர் சார்பிலும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.