போலி பாஸ்போர்ட்டில் வந்த இலங்கை பெண்கள் சிக்கினர்
சென்னை, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் வந்தவர்களின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், சோதனை செய்தனர். வந்தவர்களில் இருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அரும்பாக்கம் முகவரியில் வசிக்கும் 48 வயது பெண் மற்றும் 21 வயது இளம்பெண் என இருந்தது. இருவரும், சுற்றுலா சென்று திரும்பியதாக கூறப்படுகிறது.இவர்கள் மீது சந்தேமடைந்த குடியுரிமை அதிகாரிகள், தனியாக அழைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில், இரண்டு பயணியரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் குடியேறியதும் தெரியவந்தது. மேலும், போலி ஆவணங்கள் வாயிலாக இந்திய பாஸ்போர்ட் பெற்று, இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளனர்.இதையடுத்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், இரண்டு பேரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.