உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துப்பாக்கி சுடுதலில் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி அசத்தல்

துப்பாக்கி சுடுதலில் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி அசத்தல்

சென்னை:மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில், 'டிராப்' எனும் வானில் துாக்கியெறியும் தட்டை குறிபார்த்து சுடுதலில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி அஸ்மிகா, இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில், 51வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி புதுக்கோட்டையில் நடந்தது. இதில், மாநிலத்தின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் - வீராங்கனையர் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன், 'டிராப்' எனும் வானில் துாக்கியெறியும் தட்டை குறிபார்த்து சுடுதல் போட்டியில், தனிநபர் பிரிவில் பங்கேற்ற காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி அஸ்மிகா இரண்டு வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும், குழு பிரிவில் இரண்டு தங்க பதக்கங்களையும் வென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ