உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில அளவில் கால்பந்து போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்

மாநில அளவில் கால்பந்து போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்

சென்னை: மாநில அளவிலான கால்பந்து போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தை பிடித்தது. நேதாஜி கால்பந்து அகாடமி சார்பில், மாநில அளவிலான கால்பந்து போட்டி, தஞ்சாவூர் பரிசுத்த நகரில் உள்ள கிடோ மைதானத்தில், கடந்த 4ல் துவங்கி, நேற்று முன் தினம் நிறைவடைந்தது. இந்த போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 12 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் எஸ்.ஆர்.எம்., அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில், மதுரை சேது எப்.சி., அணியை வீழ்த்தியது. அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 4 - 3 என்ற கோல் கணக்கில், திருச்சி செயின்ட் ஜோசப் அணியை வென்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில், தமிழக போலீஸ் அணியை தோற்கடித்து, முதலிடத்தை தட்டிச் சென்றது. சிறந்த கோல் கீப்பராக, எஸ்.ஆர்.எம்., அணி வீரர் விஷ்ணு பிரசாந்த் தேர்வானார். மூன்றாம் இடத்தை ஜி.எஸ்.டி., சென்ட்ரல் எக்சைஸ் அணியும், நான்காம் இடத்தை திருச்சி செயின்ட் ஜோசப் அணியும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை