உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.டி.ஏ.டி., அணி தடகளத்தில் சாம்பியன்

எஸ்.டி.ஏ.டி., அணி தடகளத்தில் சாம்பியன்

சென்னை : மாநில அளவில் நடந்து முடிந்த ஜூனியர் தடகள போட்டியில் எஸ்.டி.ஏ.டி., அணி 51 பதக்கம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பதக்கம் வென்றது. தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் மதுரை தடகள சங்கம் சார்பில், மாநில அளவில் 37ம் ஆண்டு ஜூனியர் ஓபன் தடகள போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், மாநிலம் முழுதும் இருந்து 4,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதன் ஆண்கள் பிரிவு போட்டியில், பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 146 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான எஸ்.டி.ஏ.டி., அணி 139 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. தொடர்ந்து மகளிர் பிரிவு போட்டியில் எஸ்.டி.ஏ.டி., அணி 182 புள்ளிகள் பெற்று முதல் இடமும், பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 146 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும் பிடித்தன. போட்டி முடிவில் எஸ்.டி.ஏ.டி., அணி 20 தங்கம், 19 வெள்ளி, 12 வெண்கலம் என 51 பதக்கம் வென்று 321 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி