உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆவடியில் நாளை முகாம் துவக்கம்
ஆவடி:அரசின் பல திட்டங்கள் மற்றும் சேவைகள் பெற முடியாத மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, தீர்த்து வைக்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம், தமிழகம் முழுதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஆவடி மாநகராட்சியில், இதற்கான முகாம் நாளை துவங்கி ஆக., 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.