உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழவந்தாங்கலில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பழவந்தாங்கலில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பழவந்தாங்கல், ஆலந்துார் மண்டலம், பழவந்தாங்கலில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. மக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் இம்முகாம்களில், 13 துறைகள், 43 சேவைகளையும்; ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 15 துறைகள், 46 சேவைகளையும் வழங்குகின்றன. ஆலந்துார் மண்டலத்தில் பழவந்தாங்கல், நேரு பிரதான சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், இன்று காலை 10:00 மணிக்கு துவங்கி, மாலை 3:00 மணி வரை இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வருவாய், மருத்துவம், எரிசக்தி, சிறுபான்மையினர் நலன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகள் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், ஜாதி சான்று, பட்டா மாற்றம், பென்ஷன், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டையில் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, இந்த முகாமில் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ