மேலும் செய்திகள்
மாநில ஜூனியர் கூடைப்பந்து 41 அணிகள் பலப்பரீசை
08-Jun-2025
TNPL-லா Mass Performance by Ash அண்ணா
06-Jun-2025
சென்னை,:மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், 48 அணிகள் மோதுகின்றன.மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் சார்பில், மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி உள்ளிட்ட ஆண்களில் 34 அணிகள், பெண்களில் 14 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண்களுக்கு 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில், பெண்களுக்கு 'நாக் அவுட்' முறையிலும், போட்டிகள் நடக்கின்றன.நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான முதல் போட்டியில், எழும்பூர் புல்ஸ் மற்றும் ரெயின்போ அணிகள் மோதின. அதில், 41 - 19 என்ற கணக்கில் எழும்பூர் புல்ஸ் அணி வெற்றி பெற்றது.ஆண்களுக்கான ஆட்டத்தில், சக்சஸ் பி.சி., அணி 78 - 46 என்ற கணக்கில் ஆசியன் பி.சி., அணியையும், ஜோதி மெயின் பி.சி., அணி, 61 - 44 என்ற கணக்கில் சாம் பி.சி., அணியையும் வீழ்த்தின.மற்றொரு போட்டியில், மேயர் ஆர்.எம்., அணி, 71 - 39 என்ற கணக்கில் ஒய்.பி.சி., அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து, மாலை நேரங்களில் மின்னொளி ஆட்டங்களாக, 28ம் தேதி வரை நடக்கின்றன.
08-Jun-2025
06-Jun-2025