உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில செஸ் போட்டி சென்னை சிறுவர்கள் அசத்தல்

மாநில செஸ் போட்டி சென்னை சிறுவர்கள் அசத்தல்

சென்னை, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் தருண் தேஜஸ் செஸ் அகாடமி இணைந்து, மாநில அளவில் மூன்றாவது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி வளாகத்தில் நடத்தன.இதில், 9, 11, 13, 17 வயதிற்கு உட்பட்ட மற்றும் ஓபன் முறையில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் 'சுவிஸ்' முறையில், 'பிடே' விதிப்படி நடந்தது.போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 750 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.'ஓபன்' பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஷியாம் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். ஒன்பது வயது பிரிவில் சிறுவரில் செங்கை ஆண்டனி, சிறுமியரில் திருவள்ளூர் காஷிகா; 11 வயதில் சென்னை ஹவிஷ், திருவள்ளூர் வைஷ்ணவி ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.அதேபோல், 11 வயதுக்கு உட்பட்ட சிறுவரில் திருவள்ளூர் ஷரத், சிறுமியரில் கிருஷ்ணகிரி சஹானா; 17 வயதில் திருவள்ளூர் இன்பன், சென்னை தீபிகா ஆகியோர் முதலிடத்தை கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை