மாநில செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
சென்னை : மாநில செஸ் போட்டியில் பங்கேற்க, சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏ - மேக்ஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில செஸ் போட்டி, அக்., 2ம் தேதி, கொரட்டூர், பெரியார் நகரில் உள்ள பக்தவத்சலம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடக்க உள்ளது. இதில், எட்டு, 10, 12, 15 மற்றும் 20 வயது பிரிவு களில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்க உள்ளன. போட்டி யில் வெற்றி பெறுவோருக்கு கோப்பைகள் மற்றும் செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் செஸ் கடிகாரம் பரிசாக வழங்கப்பட உள்ளன. 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட மாநில முழுதும் இருந்து சிறுவர் - சிறுமியர் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், இம்மாதம் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94453 32077, 93605 53703 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.