ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரியில் அதிநவீன ரேடார் மையம் திறப்பு
சென்னை, ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அதிநவீன 'ரேடார்' மையம் திறக்கப்பட்டுள்ளது.சென்னையை அடுத்த பென்னலுாரில் அமைந்துள்ள, ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரியில், அதிநவீன ரேடார் என்ற நோயறிதல் மற்றும் கதிரியக்கவியல் பயன்பாட்டு மையத்தை, முருகப்பா குழுமத்தின், கார்போரண்டம் யூனிவர்சல் நிறுவனத்தின் மனிதவள தலைவர் என்.ஆர்.மணி திறந்து வைத்தார்.இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மருத்துவ சிகிச்சைக்கு தேவையான படங்களை துல்லியமாக எடுக்க முடியும்.அதிநவீன ரேடார் மையம் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக செயல்பட உள்ளது.இதுகுறித்து, ராஜலட்சுமி கல்வி நிறுவன துணைத் தலைவர் ஹரி சங்கர் மேகநாதன் பேசியதாவது:'ரேடார்' மையம் பரிசோதனை கூடம் மட்டுமல்ல; எதிர்கால மருத்துவத்தின் புதிய வடிவமைப்பை உருவாக்கும் ஆய்வு களம்.டாக்டர்களும், பொறியாளர்களும் ஒன்றிணைந்து கற்கும் புதுமையான சூழலை உருவாக்கி உள்ளோம். எதிர்கால மருத்துவ தேவைகளை சமாளிக்க கூட்டு முயற்சிகள் அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.***படவிளக்கம்: ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரியின் அதிநவீன ரேடார் மையத்தை, கார்போரண்டம் யூனிவர்சல் நிறுவன மனிதவள பிரிவு தலைவர் என்.ஆர்.மணி திறந்து வைத்தார். உடன் இடமிருந்து: கல்லுாரியின் துணை முதல்வர் குணபிரியா ரகுநாத், துணைத் தலைவர் ஹரி சங்கர் மேகநாதன், டீன் வனிதா, மருத்துவ இயக்குனர் சுகுமாறன் அண்ணாமலை உள்ளிட்டோர்.