மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் வேளச்சேரியில் 18ல் துவக்கம்
சென்னை:வேளச்சேரியில் வரும், 18ல் துவங்க உள்ள மாநில நீச்சல் போட்டியில் பங்கேற்க, வீரர், வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், 41வது சப் - ஜூனியர் மற்றும் 51வது ஜூனியருக்கான மாநில நீச்சல் போட்டிகள், சென்னை, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் நடக்க உள்ளன.இம்மாதம், 18ல் துவங்கி 20ம் தேதி வரை மூன்று நாட்கள் போட்டிகள் நடக்கவுள்ளன. இதனுடன் 'வாட்டர் போலோ' மற்றும் 'டைவிங்' போட்டிகளும் நடக்கின்றன. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட அனைத்து மாவட்டங்களில் இருந்து, வீரர், வீராங்கனையர் பங்கேற்கலாம்.இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 12ம் தேதிக்குள் www.tnsaa.inஎன்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் வெற்றி பெறுவோர், தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணியின்வீரர்களாக தேர்வு செய்யப்படுவர் என, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.