உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கற்கால கருவிகள் பட்டறை வாலாஜாபாதில் கண்டுபிடிப்பு

கற்கால கருவிகள் பட்டறை வாலாஜாபாதில் கண்டுபிடிப்பு

வாலாஜாபாத்,தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெற்றித்தமிழன் மற்றும் பிரேம், சரண் ஆகியோர் அடங்கிய குழுவினர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொல்லியல் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் ஒன்றியம், ஒடந்தாங்கல் ஏரியையொட்டி நேற்று, கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்பகுதியில், குவியல், குவியலாக உடைந்து சிதைந்த கற்கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது.வெற்றித்தமிழன் கூறியதாவது:கற்கால மனிதர்கள், வேட்டை மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு, கற்களால் ஆன கருவிகளை பயன்படுத்தி உள்ளனர். இதற்காக நீரோடைகளை ஒட்டிய, பல வகை கற்கள் கிடைக்கும் பகுதியில் பட்டறை அமைத்து, கற்கருவிகளை உருவாக்கினர்.அந்த வகையில், வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்குப்பத்தில் இருந்து, சின்னிவாக்கம் செல்லும் சாலை, வட திசையில் உள்ள ஏரியை ஒட்டி, இவ்வாறான கற்கருவிகள் உருவாக்கியதற்கான தடயங்களை கண்டறிந்து உள்ளோம்.புதிய கற்கால மனிதர்கள், சில முழுமையான கற்கருவிகளை உருவாக்கும்போது, உடைந்து சிதறும் சில்லுகள், இந்த ஏரி பகுதியில் குவியல், குவியலாக மணல் திட்டுக்கள் மீது ஆங்காங்கே பரவி காணப்படுகிறது.இந்த கற்கருவிகள், 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம். கடந்த காலத்தில் இப்பகுதி, மிகப்பெரிய நீர்வழி தடமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை