மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்கும் அதிகாரிகள்
02-Feb-2025
அரும்பாக்கம்,: அரும்பாக்கம், வத்தலகுண்டு ஆறுமுகம் நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில், விநாயகர் மற்றும் அம்மன் கோவில் மற்றும் நான்கு வீடுகள் உள்ளன. இந்த நிலம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இதையடுத்து, ஜன., 23ம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகள் மட்டும் அகற்றப்பட்டன. அத்துடன், கோவில் நுழைவாயில், இரும்பு தகரத்தால் அடைக்கப்பட்டது. இந்நிலையில், கோவி லை திறக்க வேண்டும் என, 50க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் நேற்று, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு வந்த அரும்பாக்கம் போலீசார், அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனக்கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.
02-Feb-2025