உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு  மாணவர் பலி 

ரயிலில் அடிபட்டு  மாணவர் பலி 

ஆவடி: விரைவு ரயிலில் அடிபட்டு கல்லுாரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்து கல்லுாரி ரயில் நிலையம் அருகே நேற்று மதியம், இளைஞர் ஒருவர் விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், 22, எனவும், பார்மசி கல்லுாரி மாணவர் எனவும் கூறப்படுகிறது. பெரம்பூரில் நண்பர்களுடன் தங்கி கல்லுாரியில் படித்து வந்த இவர், கல்லுாரி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !