உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி

சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி

பரங்கிமலை, சாலை மைய தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மீனம்பாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோவரதன், 19. பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த 29ம் தேதி, இருசக்கர வாகனத்தில் ராமாபுரத்தில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி புறப்பட்டார். பின்னால், அவரது நண்பர் அருண்குமார், 17, அமர்ந்திருந்தார். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், பட்ரோடு பகுதியில் கடந்தபோது, நிலைதடுமாறி சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவரதன், நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். அருண்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ