உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்கூட்டர் தடுமாறி விபத்து :மாணவர் பலி

ஸ்கூட்டர் தடுமாறி விபத்து :மாணவர் பலி

சென்னை: வேகமாக சென்ற ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அஷ்ரபுல் ருவைத், 19, என்ற கல்லுாரி மாணவர் பலியானார். ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அஷ்ரபுல் ருவைத்; ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.இ., மாணவர். அண்ணா நகரில் உள்ள ஹோட்டலில், நண்பர்களுடன் சாப்பிட்டு, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு புறப்பட்டார். கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை - டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் வேகமாக சென்றபோது, ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்ததில், அஷ்ரபுல் ருவைத் சாலையில் விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை