அகத்தியர் வேடமணிந்து மாணவர்கள் நடைபயணம்
சென்னை:காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் ஆண்டு கருப்பொருளாக அகத்திய முனிவர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய செம்மொழி தமிழராய்ச்சி நிறுவனமும், சாஸ்திரா பல்கலையும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தின. தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ ---- மாணவியர், அகத்திய முனிவர் போல வேடமணிந்து, நடைபயணம் மேற்கொண்டனர்.இந்த நடைபயணம், தி.நகரில் உள்ள ஹிந்தி பிரசார சபாவில் துவங்கி, அகத்தியர் ஆசிரமம் வரை மேற்கொள்ளப்பட்டது. இதில், சாஸ்திரா பல்கலை துணைவேந்தர் வைத்ய சுப்ரமணியன், இயக்குனர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.