உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலத்தில் நிற்கால் ஓடும் வெள்ளம் மாணவர்கள் ஆபத்தான பயணம்

பாலத்தில் நிற்கால் ஓடும் வெள்ளம் மாணவர்கள் ஆபத்தான பயணம்

மதுரவாயல் சென்னையில், கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய மழைநீர், இன்னும் கூட சில இடங்களில் வடியாத அவலம் உள்ளது.அந்த வகையில், கூவம் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர், மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தின் மீது பாய்கிறது.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர், தண்ணீரால் சறுக்கி விழாமல் இருக்க, அஙகுள்ள பேரிகார்டு எனும் தடுப்புகள் மீது ஏறி, ஆபத்தான முறையில் செல்கின்றனர்.மாணவர்களிடம் கேட்டபோது, 'தரைப்பாலத்தை தவிர்த்தால், 5 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டியதாக உள்ளது. அதனால் தான், தடுப்புகளில் ஏறி கடக்கிறோம்' என்றனர்.சில தினங்களுக்கு முன், தரைப்பாலத்தை கடக்க முயன்று சிக்கிய காரை, பொக்லைன் வாகனம் வாயிலாக போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anonymous
டிச 17, 2024 08:59

₹4000 கோடியில் என்னாமா மழையை எதிர் கொள்ள நம் தமிழக அரசு தயார் செய்துள்ளது, நினைத்தாலே மயிற்கூசெரிகிறது. அருமை.


சமீபத்திய செய்தி