மேலும் செய்திகள்
750 போலீசார் பாதுகாப்பு
19-Dec-2024
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனரிடம் கல்லுாரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டி.ஜி.பி., அலுவலக அமைச்சுப் பணியாளர் மற்றும் உடந்தையாக இருந்த மாணவியின் தாய் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.எழும்பூர் பகுதியைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது தாய் டி.ஜி.பி., அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார்.சென்னை போலீஸ் கமிஷனரிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதில், தாயுடன் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர் பாக்யராஜ் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதற்கு தன் தாயும் உடந்தையாக இருந்ததாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கமிஷனர் உத்தரவின்படி, சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் இருவர் மீதும், நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
19-Dec-2024