சப் - ஜூனியர் கால்பந்து 5 சென்னை வீரர்கள் தகுதி
சென்னை: தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழக சப் - ஜூனியர் கால்பந்து அணியில், சென்னையின் ஐந்து வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய சப் - ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தின் நராயண்பூரில் வரும் 25ம் தேதி துவங்கவுள்ளது. இதில், தமிழகம், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் உட்பட, நாட்டின் 15 அணிகள், நான்கு பிரிவுகளாக போட்டியிடுகின்றன. இதன் 'டி' பிரிவில், புதுச்சேரி, மத்திய பிரதேசம் அணிகளுடன், தமிழக அணி இடம்பெற்றுள்ளது. இந்த போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையின் நிசாந்த் ராய், முகமது ரைஹான், ரோஷன், தீர்த் கோத்தாரி, புவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான பயிற்சி முகாம், தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரில், வரும் 18ம் தேதி துவங்க உள்ளது. தமிழக அணி, முதல் போட்டியில் மத்திய பிரதேச அணியை, வரும் 3ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.