உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சின்ன போரூரில் திடீர் பள்ளம்

சின்ன போரூரில் திடீர் பள்ளம்

போரூர், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூரில் அண்ணா சாலை உள்ளது. மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அண்ணா சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் நெரிசல் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, அண்ணா சாலை மற்றும் மருத்துவமனை சாலை சந்திப்பில், 8 அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் கசிந்து சாலை உள்வாங்கியதால் பள்ளம்விழுந்தது தெரிய வந்தது.இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, அச்சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து, குடிநீர் வாரிய ஊழியர்கள் குழாயை சீரமைத்தனர்.பின், பள்ளத்தில் மண் கொட்டி நிரப்பினர். இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ