உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

சென்னை,குப்பை கையாளும் பணி தனியார்மயம் ஆவதை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே, 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள, நான்கு மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடும் நடவடிக்கையில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இதனால், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மாநகராட்சியில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என கோஷமிட்டு வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை