உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அறுந்து விழுந்த மின் கம்பி திருவொற்றியூரில் திடீர் பீதி

அறுந்து விழுந்த மின் கம்பி திருவொற்றியூரில் திடீர் பீதி

திருவொற்றியூர், உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால், திருவொற்றியூரில் பீதி ஏற்பட்டது.திருவொற்றியூர் மேற்கு, ராஜா சண்முகம் நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட நகர்களில் 5,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மின் தேவைக்காக மின்கம்பிகள் மேலே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல சேதமடைந்து ஒட்டு போடப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு, ராஜா சண்முகம் நகர் ஒன்பதாவது தெருவில் ஒட்டுப்போட்ட மின்கம்பியில் உயரழுத்த மின்சாரம் வந்துள்ளது.அதிக அழுத்தத்தை தாக்கு பிடிக்க முடியாத அந்த மின்கம்பி, பலத்த சத்தத்துடன் அறுந்து தரையில் விழுந்தது. அந்நேரத்தில் யாரும் சாலையில் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் பாதிப்பு ஏற்படவில்லை. மின்கம்பி அறுந்து விழுந்து, அரை மணி நேரமாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டாததால், பகுதிமக்கள் தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து, கம்பியை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே, பல ஒட்டு போடப்பட்ட மின்கம்பியில் மீண்டும் ஒட்டுப்போட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து, மின் சேவை சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை