உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறந்தவர் விபரம் தெரியாமல் தவிப்பு

இறந்தவர் விபரம் தெரியாமல் தவிப்பு

ஆலந்துார், வேளச்சேரி- - தாம்பரம் சாலையில், மடிப்பாக்கம், மயிலை பாலாஜி நகர் பகுதியில், கடந்த மாதம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, தாம்பரத்தில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகர பேருந்து, அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்தவரின் அடையாளமாக, இடுப்பின் கீழ் மச்சம், கருப்பு நிற அரை கால் சட்டை அணிந்திருந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை